×

நாகர்கோவில் அருகே 1,350 கிலோ எடையில் வெண்கல மணி: தெலுங்கானாவில் உள்ள புவனகிரி பெருமாள் கோயிலுக்கு செல்கிறது

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே தயாரிக்கப்பட்டு வரும் 1,350 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய வெண்கல கோயில் மணி தெலுங்கானா மாநிலம் புவனகிரி பெருமாள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டமலை பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் பிராண்டமான கோயில் மணி தயாரிக்கப்பட்டு வருகிறது. ரூ.30 லட்சம் மதிப்பில் வெண்கலத்தில் தயாரிக்கப்படும் இந்த மணி 1,350 கிலோ எடையும், ஐந்தரை அடி உயரமும் கொண்டது.

இந்த மணி திருமலை தேவஸ்தானம் சார்பில் தெலுங்கானா மாநிலம் புவனகிரி மலை பகுதியில் ரூ.1,400 கோடியில் கட்டப்படும் பெருமாள் கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த மணியின் வெளிவட்டம் 5 அடியும், உள்விட்டம் நான்கரை அடியும் கொண்டதாகும். இதுபோன்ற மணி வேறு எங்கும் இல்லை என்று உலோக கலைஞர்கள் தெரிவித்தனர். மேலும், கிரேன் உதவியுடன் தான் இந்த மணியை தூக்க முடியும் என்றும் இன்னும் ஒரு சில வாரங்களில் தெலுங்கானாவிற்கு அனுப்பப்படும் கைவினை கலைஞர் தெரிவித்தனர்.

The post நாகர்கோவில் அருகே 1,350 கிலோ எடையில் வெண்கல மணி: தெலுங்கானாவில் உள்ள புவனகிரி பெருமாள் கோயிலுக்கு செல்கிறது appeared first on Dinakaran.

Tags : Bronze bell ,Nagarko ,Bhuvanagiri ,Perumal Temple ,Telangana ,Nagargo ,Nagargo, Telangana State ,
× RELATED நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை!